குக்கீகளை Google எப்படிப் பயன்படுத்துகிறது

This page describes the purposes for which Google uses cookies and similar technologies. It also explains how Google and our partners use cookies in advertising.

குக்கீகள் என்பவை நீங்கள் பார்வையிடும் இணையதளத்தின் மூலம் உங்கள் உலாவிக்கு அனுப்பப்படும் சிறிய வார்த்தைகளாகும். உங்கள் வருகை குறித்த தகவல்களை அந்த இணையதளம் நினைவில் வைத்துக்கொள்ள இவை உதவுகின்றன. இது தளத்தை நீங்கள் மீண்டும் பார்வையிடுவதை எளிதாக்குகிறது, அத்துடன் தளத்தை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகிறது. ஆப்ஸ், சாதனம், பிக்சல் குறிச்சொற்கள், அகச் சேமிப்பகம் ஆகியவற்றை அடையாளங்காணப் பயன்படுத்தப்படும் பிரத்தியேக அடையாளங்காட்டிகள் உள்ளிட்ட அதே போன்ற தொழில்நுட்பங்களும் இதே செயல்பாட்டைச் செய்யலாம். இந்தப் பக்கம் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளவாறு குக்கீகளும் அதே போன்ற தொழில்நுட்பங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்.

குக்கீகளையும் பிற தகவல்களையும் நாங்கள் பயன்படுத்தும்போது உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை அறிய, தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

Purposes of cookies and similar technologies used by Google

Google may store or use some or all of the cookies or similar technologies in your browser, app, or device for the purposes described below. To manage how cookies are used, including rejecting the use of cookies for certain purposes, you can visit g.co/privacytools. You can also manage cookies in your browser (though browsers for mobile devices may not offer this visibility). Some of these technologies may be managed in your device settings or in an app’s settings.

செயல்பாடு

Cookies and similar technologies used for functionality purposes allow you to access features that are fundamental to a service. These cookies are used in order to deliver and maintain Google services. Things considered fundamental to a service include remembering choices and preferences, like your choice of language; storing information relating to your session, such as the content of a shopping cart; enabling features or performing tasks requested by you; and product optimizations that help maintain and improve that service.

Examples of cookies

Some cookies and similar technologies are used to maintain your preferences. For example, most people who use Google services have a cookie called ‘NID’ or ‘_Secure-ENID’ in their browsers, depending on their cookie choices. These cookies are used to remember your preferences and other information, such as your preferred language, how many results you prefer to have shown on a search results page (for example, 10 or 20), and whether you want to have Google’s SafeSearch filter turned on. Each ‘NID’ cookie expires 6 months from a user’s last use, while the ‘_Secure-ENID’ cookie lasts for 13 months. Cookies called ‘VISITOR_INFO1_LIVE’ and ‘__Secure-YEC’ serve a similar purpose for YouTube and are also used to detect and resolve problems with the service. These cookies last for 6 months and for 13 months, respectively.

குறிப்பிட்ட உலாவல் அமர்வின்போது உங்கள் அனுபவத்தைப் பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், பிற குக்கீகளும் அதே போன்ற தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, வெளிப்படையான தானியங்கி விருப்பங்கள், கலைத்துப் போட்ட உள்ளடக்கம், பிளேயர் அளவு போன்ற வீடியோவின் இயக்கத்திற்கான விருப்பங்கள், உங்களுக்கு விருப்பமான பக்க உள்ளமைவு போன்ற தகவல்களைச் சேமிக்க 'PREF' குக்கீயை YouTube பயன்படுத்துகிறது. YouTube Musicகைப் பொறுத்தவரை ஒலியளவு, மீண்டும் இயக்குதல், தானியங்கி போன்றவை இந்த விருப்பங்களில் அடங்கும். பயனர் கடைசியாகப் பயன்படுத்தியதில் இருந்து 8 மாதங்களுக்குப் பிறகு இந்தக் குக்கீ காலாவதியாகிவிடும். 'pm_sess' குக்கீ உங்கள் உலாவி அமர்வைப் பராமரிக்கவும் உதவுகிறது. இது 30 நிமிடங்கள் வரை செயலில் இருக்கும்.

Google சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் குக்கீகள் மற்றும் அதே போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும். உதாரணமாக, பயனரின் ஆரம்ப உள்ளீட்டின் அடிப்படையில் தேடல் வினவல்களைத் தானே நிரப்புவதன் மூலம் தேடல் முடிவுகளை வழங்குவதை 'CGIC' குக்கீ மேம்படுத்துகிறது. இந்தக் குக்கீ 6 மாதங்கள் வரை செயலில் இருக்கும்.

பயனருடைய குக்கீ விருப்பங்களைச் சேமிக்க, 13 மாதங்கள் வரை செயலில் இருக்கக்கூடிய ‘SOCS’ குக்கீயை Google பயன்படுத்துகிறது.

பாதுகாப்பு

Google uses cookies and similar technologies for security purposes to protect you as you interact with a service by authenticating users, protecting against spam, fraud and abuse, and tracking outages.

Examples of cookies

The cookies and similar technologies used to authenticate users help ensure that only the actual owner of an account can access that account. For example, cookies called ‘SID’ and ‘HSID’ contain digitally signed and encrypted records of a user’s Google Account ID and most recent sign-in time. The combination of these cookies allows Google to block many types of attack, such as attempts to steal the content of forms submitted in Google services. These cookies last for 2 years.

சில குக்கீகளும் அதே போன்ற தொழில்நுட்பங்களும் ஸ்பேம், மோசடி, தவறான பயன்பாடு ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, ‘pm_sess’, ‘YSC’ ஆகிய குக்கீகள், ஓர் உலாவல் அமர்வில் பெறும் கோரிக்கைகள் பயனர் மேற்கொண்டவைதான் என்பதையும் பிற தளங்கள் அவற்றைச் செய்யவில்லை என்பதையும் உறுதிசெய்யும். பயனருக்குத் தெரியாமல் அவரது சார்பாகச் செயல்படும் தீங்கிழைக்கும் தளங்களை இந்தக் குக்கீகள் தடுக்கின்றன. ‘pm_sess’ குக்கீ 30 நிமிடங்கள் வரை செயலில் இருக்கும். பயனரின் உலாவல் அமர்வு முடியும் வரை ‘YSC’ குக்கீ செயலில் இருக்கும். மோசடி அல்லது தவறான இம்ப்ரெஷன்கள்/விளம்பரக் கிளிக்குகளுக்காக விளம்பரதாரர்களுக்குத் தவறுதலாகக் கட்டணம் விதிக்காமல் இருப்பதையும் YouTube கூட்டாளர் திட்டத்தில் உள்ள YouTube கிரியேட்டர்களுக்கு வருமானம் நியாயமாக வழங்கப்படுவதையும் உறுதிசெய்வதற்கு உதவ ‘__Secure-YEC’, ‘AEC’ ஆகிய குக்கீகள் ஸ்பேம், மோசடி, தவறான பயன்பாடு ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன. ‘AEC’ குக்கீ 6 மாதங்கள் வரை செயலில் இருக்கும். ‘__Secure-YEC’ குக்கீ 13 மாதங்கள் வரை செயலில் இருக்கும்.

பகுப்பாய்வுகள்

Google uses cookies and similar technologies for analytical purposes to understand how you interact with a particular service. These cookies and similar technologies help collect data that allows us to measure audience engagement and site statistics. This helps us to understand how services are used, and to enhance their content, quality and features, while also allowing us to develop and improve new services.

Examples of cookies

வருகையாளர்கள் தங்களது சேவைகளுடன் எவ்வாறு ஈடுபடுகின்றனர் என்பதைத் தளங்களும் ஆப்ஸும் புரிந்துகொள்ள, சில குக்கீகளும் அதே போன்ற தொழில்நுட்பங்களும் அவற்றுக்கு உதவுகின்றன. உதாரணமாக, Google Analytics சேவையைப் பயன்படுத்தும் பிசினஸ்கள் சார்பாகத் தகவல்களைச் சேகரிக்கவும், வருகையாளர்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்தாமல் தள உபயோகப் புள்ளிவிவரங்களை அவர்களுக்குத் தெரிவிக்கவும் குக்கீகளின் தொகுப்பை Google Analytics பயன்படுத்துகிறது. Google Analytics பயன்படுத்தும் ‘_ga’ என்ற முதன்மைக் குக்கீயானது, ஒரு வருகையாளரை மற்றொருவரிடமிருந்து வேறுபடுத்தியறிய சேவைகளுக்கு உதவுகிறது. இது 2 வருடங்கள் வரை செயலில் இருக்கும். Google சேவைகள் உட்பட Google Analyticsஸைச் செயல்படுத்தும் அனைத்துத் தளங்களும் ‘_ga’ குக்கீயைப் பயன்படுத்தும். ஒவ்வொரு ‘_ga’ குக்கீயும் குறிப்பிட்ட பிராப்பர்ட்டிக்கு ஏற்ப பிரத்தியேகமாக இருக்கும். எனவே, தொடர்பற்ற இணையதளங்களில் பயனரையோ உலாவியையோ கண்காணிக்க இதைப் பயன்படுத்த முடியாது.

பகுப்பாய்வுகளுக்காக, Google Searchசில் ‘NID’, ‘_Secure-ENID’ குக்கீகளையும் YouTubeல் ‘VISITOR_INFO1_LIVE’, ‘__Secure-YEC’ குக்கீகளையும் Google சேவைகள் பயன்படுத்துகின்றன. பகுப்பாய்வுகளுக்காக, ‘Google உபயோக ஐடி’ போன்ற பிரத்தியேக அடையாளங்காட்டிகளையும் Google மொபைல் ஆப்ஸ் பயன்படுத்தலாம்.

விளம்பரப்படுத்தல்

Google uses cookies for advertising purposes, including to show personalized ads, serving and rendering ads, and personalizing ads (depending on your settings at myadcenter.google.com, and adssettings.google.com/partnerads). These cookies also are used for, limiting the number of times an ad is shown to a user, muting ads you have chosen to stop seeing, and delivering and measuring the effectiveness of ads.

Examples of cookies

The ‘NID’ cookie is used to show Google ads in Google services for signed-out users, while the ‘IDE’ and ‘id’ cookies are used to show Google ads on non-Google sites. Mobile advertising IDs, such as the Android’s Advertising ID (AdID), are used for a similar purpose on mobile apps, depending on your device settings. If you have personalized ads enabled, the ‘IDE’ cookie is used to personalize the ads you see. If you have turned off personalized ads, the ‘id’ cookie is used to remember this preference so you don’t see personalized ads. The ‘NID’ cookie expires 6 months after a user’s last use. The ‘IDE,’ and ‘id’ cookies last for 13 months in the European Economic Area (EEA), Switzerland, and the United Kingdom (UK), and 24 months everywhere else.

உங்கள் விளம்பர அமைப்புகளைப் பொறுத்து, YouTube போன்ற பிற Google சேவைகளும் விளம்பரப்படுத்துவதற்காக இந்தக் குக்கீகளையும் ‘VISITOR_INFO1_LIVE’ குக்கீ போன்ற பிற குக்கீகளையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தக்கூடும்.

விளம்பரப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் சில குக்கீகளும் அதே போன்ற தொழில்நுட்பங்களும் Google சேவைகளைப் பயன்படுத்த உள்நுழையும் பயனர்களுக்கானவை. உதாரணமாக, 'DSID' குக்கீ Google அல்லாத பிற இணையதளங்களில் உள்நுழைந்துள்ள பயனரை அடையாளம் காணப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் விளம்பரப் பிரத்தியேகமாக்கல் தொடர்பான பயனரின் அமைப்பு அதற்கேற்ப பின்பற்றப்படுகிறது. ‘DSID’ குக்கீ 2 வாரங்கள் வரை செயலில் இருக்கும்.

Googleளின் விளம்பரப்படுத்தல் பிளாட்ஃபார்ம் மூலமாக, பிசினஸ்களால் Google சேவைகளிலும் Google அல்லாத தளங்களிலும் விளம்பரப்படுத்த முடியும். மூன்றாம் தரப்புத் தளங்களில் விளம்பரங்களைக் காட்ட Googleளுக்குச் சில குக்கீகள் உதவுகின்றன, அவை நீங்கள் பார்வையிடும் இணையதளத்தின் டொமைனில் அமைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, Google விளம்பரங்களைக் காட்ட தளங்களை ‘_gads’ குக்கீ அனுமதிக்கிறது. ‘_gac_’ என்று தொடங்கும் குக்கீகள் Google Analyticsஸில் இருந்து வந்தவையாகும். இவை பயனரின் செயல்பாட்டையும் தங்கள் விளம்பரங்களின் செயல்திறனையும் அளவிடுவதற்கு விளம்பரதாரர்களால் பயன்படுத்தப்படுகின்றன. ‘_gads’ குக்கீ 13 மாதங்கள் வரையிலும், ‘_gac_’ குக்கீகள் 90 நாட்கள் வரையிலும் செயலில் இருக்கும்.

சில குக்கீகளும் அதே போன்ற தொழில்நுட்பங்களும் நீங்கள் பார்வையிடும் தளத்தின் விளம்பரத்தையும் பிரச்சாரச் செயல்திறனையும் Google விளம்பரங்களின் கன்வெர்ஷன் விகிதங்களையும் அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பயனர்கள் எத்தனை முறை விளம்பரங்களைக் கிளிக் செய்து தங்களின் தளத்தில் பொருட்களை வாங்குகின்றனர் என்பது போன்ற செயல்பாடுகளை விளம்பரதாரர்கள் தீர்மானிப்பதற்கு உதவ ‘_gcl_’ என்று தொடங்கும் குக்கீகள் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்றன. கன்வெர்ஷன் விகிதங்களை அளவிடப் பயன்படுத்தப்படும் குக்கீகள் விளம்பரங்களைப் பிரத்தியேகப்படுத்தப் பயன்படுத்தப்படுவதில்லை. ‘_gcl_’ குக்கீகள் 90 நாட்கள் வரை செயலில் இருக்கும். விளம்பரம் மற்றும் பிரச்சாரச் செயல்திறனை அளவிட Android சாதனங்களில் விளம்பரப்படுத்தல் ஐடி போன்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தலாம். உங்கள் Android சாதனத்தில் உங்கள் விளம்பரப்படுத்தல் ஐடி அமைப்புகளை நிர்வகிக்கலாம்.

விளம்பரப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்படும் குக்கீகள் குறித்த கூடுதல் தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிரத்தியேகப்படுத்துதல்

Cookies and similar technologies are used for the purpose of showing personalized content.These cookies help enhance your experience by providing personalized content and features, depending on your settings at g.co/privacytools or your app and device settings.

Examples of cookies

மிகவும் தொடர்புடைய முடிவுகள் மற்றும் பரிந்துரைகள், பிரத்தியேக YouTube முகப்புப்பக்கம், உங்கள் ஆர்வங்களின் அடிப்படையில் பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்கள் போன்றவை பிரத்தியேக உள்ளடக்கம் மற்றும் அம்சங்களில் அடங்கும். உதாரணத்திற்கு, ‘VISITOR_INFO1_LIVE’ குக்கீயானது நீங்கள் முன்பு பார்த்தவை மற்றும் தேடியவற்றின் அடிப்படையில் YouTubeல் பிரத்தியேகப் பரிந்துரைகளைக் காட்டக்கூடும். ‘NID’ குக்கீயானது Searchசில் நீங்கள் தேடல் வார்த்தைகளை டைப் செய்யும்போது பிரத்தியேகத் தன்னிரப்பி அம்சங்களை அனுமதிக்கும். இந்தக் குக்கீகள் பயனரின் கடைசி உபயோகத்திலிருந்து 6 மாதங்கள் முடிந்தபிறகு காலாவதியாகிவிடும்.

இன்னொரு குக்கீயான ‘UULE’, உங்கள் இருப்பிடத்திற்குத் தொடர்புடைய முடிவுகளை Google காட்டும் விதமாக உங்கள் உலாவியில் இருந்து துல்லியமான இருப்பிடத் தகவலை Googleளின் சேவையகங்களுக்கு அனுப்பும். உங்கள் உலாவி அமைப்புகளையும், இருப்பிடத் தகவலை அறிந்துகொள்ள உலாவியை அனுமதித்துள்ளீர்களா என்பதையும் பொறுத்து இந்தக் குக்கீ பயன்படுத்தப்படும். ‘UULE’ குக்கீ 6 மணிநேரம் வரை செயலில் இருக்கும்.

பிரத்தியேகப்படுத்தப் பயன்படும் குக்கீகளையும் அதே போன்ற தொழில்நுட்பங்களையும் நீங்கள் நிராகரித்தாலும், உங்களுக்குக் காட்டப்படும் பிரத்தியேகமாக்கப்படாத உள்ளடக்கமும் அம்சங்களும் உங்கள் இருப்பிடம், மொழி, சாதன வகை, நீங்கள் தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் உள்ளடக்கம் போன்ற உங்கள் சூழ்நிலைக் காரணிகளின் அடிப்படையில் காட்டப்படலாம்.

உங்கள் உலாவியில் குக்கீகளை நிர்வகித்தல்

உலாவும்போது குக்கீகள் எப்படி அமைக்கப்படுகின்றன, எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நிர்வகிப்பது, குக்கீகளையும் உலாவிய தரவையும் அழிப்பது ஆகியவற்றைப் பெரும்பாலான உலாவிகளில் செய்யலாம். மேலும், ஒவ்வொரு தளத்தின் அடிப்படையிலும் குக்கீகளை நிர்வகிக்க அனுமதிக்கும் அமைப்புகளும் உங்கள் உலாவியில் இருக்கக்கூடும். உதாரணமாக, chrome://settings/cookies தளத்தில் அணுகக்கூடிய Google Chrome உலாவியின் அமைப்புகள் மூலம் ஏற்கெனவே இருக்கும் குக்கீகளை அழிக்கலாம், அனைத்துக் குக்கீகளையும் அனுமதிக்கலாம்/தடுக்கலாம், அத்துடன் இணையதளங்களுக்கான குக்கீ விருப்பங்களையும் அமைக்கலாம். Google Chromeமில் மறைநிலைப் பயன்முறையும் உள்ளது. இது மறைநிலைச் சாளரங்கள் அனைத்தையும் நீங்கள் மூடியபிறகு, நீங்கள் இதுவரை இணையத்தில் பார்த்தவற்றை நீக்கும், உங்கள் சாதனத்தின் மறைநிலைச் சாளரங்களில் உள்ள குக்கீகளை அழிக்கும்.

ஆப்ஸிலும் சாதனங்களிலும் ஒரே மாதிரியான தொழில்நுட்பங்களை நிர்வகித்தல்

ஆப்ஸ், சாதனம் ஆகியவற்றை அடையாளங்காணப் பயன்படுத்தப்படும் பிரத்தியேக அடையாளங்காட்டிகள் போன்ற ஒரே மாதிரியான தொழில்நுட்பங்கள் எப்படி அமைக்கப்படுகின்றன, எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பெரும்பாலான மொபைல் சாதனங்களிலும் ஆப்ஸிலும் நிர்வகிக்கலாம். உதாரணமாக, Android சாதனங்களில் உள்ள விளம்பரப்படுத்தல் ஐடியையும் Appleளின் விளம்பர அடையாளங்காட்டியையும் உங்கள் சாதனத்தின் அமைப்புகளில் நிர்வகிக்கலாம். ஆப்ஸ் சார்ந்த அடையாளங்காட்டிகளை ஆப்ஸின் அமைப்புகளில் நிர்வகிக்கலாம்.

Google ஆப்ஸ்
முதன்மை மெனு