தவறான பயன்பாடு & மோசடிகள் குறித்துக் கவனமாக இருங்கள்

பல்வேறு வகையான உதவிகளையும் படம்/தரவு குறித்த அறிவிப்புகளையும் வழங்குவதற்கான Google பணியாளர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு வருபவர்கள் அல்லது அதுபோன்று தொடர்புகொள்பவர்கள் குறித்து கவனமாக இருங்கள். Google சார்பாகப் பேசுவதற்கு இந்த நிறுவனங்களுக்கு அங்கீகாரம் இல்லை என்பதை வலியுறுத்துகிறோம். மேலும், தங்களைத் தனிப்பட்ட ஒப்பந்ததாரர்களாக மட்டுமே அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டும்.

Google சார்பாக நேரடியாகத் தொடர்புகொள்கிறோம் என்று சொல்லி யாராவது உங்களைத் தொடர்புகொண்டால் அவர்களைக் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். கீழே குறிப்பிட்டுள்ள எந்தக் காரணத்திற்காகத் தொடர்புகொண்டாலும் அவர்களைத் தவிர்த்துவிடுங்கள்:

  • Google சார்பாகச் சேவைகள்/பயிற்சி வழங்குதல், அளவீடுகளைக் கணக்கிடுதல், டிஜிட்டல் மீடியா, டிஜிட்டலில் பிரபலமடைபவை/புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள், பிசினஸ் தொடர்பாகப் புதிதாகப் பிரபலமடைபவை குறித்து அறிக்கையளித்தல்; மீடியா ஆலோசனை போன்றவை;
  • Google சேவைகளின் வழக்கமான செயல்பாட்டிற்குப் பொருந்தாத வாக்குறுதிகளை அளிப்பது. உதாரணத்திற்கு, Search, Google Street View, Google Maps ஆகியவற்றில் முன்னிலைப்படுத்துவதாக உறுதியளிப்பது;
  • தொடர்ச்சியான டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் மூலம் ஒப்பந்ததாரருக்கு அழுத்தம் தருவது, Google பிளாட்ஃபார்ம்களில் இருந்து உள்ளடக்கத்தை அகற்றுமாறு அச்சுறுத்துவது.

புகைப்படக் கலைஞர்களையோ ஏஜென்சிகளையோ Google பணியமர்த்தாது என்பதை நினைவில்கொள்வது மிகவும் முக்கியம். இவர்கள் தனிப்பட்ட தரப்புகளாகச் செயல்படக்கூடியவர்கள். மேலும் இவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் Googleளின் குறுக்கீடோ பங்களிப்போ இருக்காது.

பயனர் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியம். அதற்காக, Google பிராண்டுகள் மற்றும் அவற்றின் பிளாட்ஃபார்ம்களின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளோம். இவற்றைச் செய்வதற்கு எவருக்கும் அங்கீகாரம் இல்லை:

  • நிறுவன வாகனங்களில் Street View ஐகான், முத்திரை மற்றும்/அல்லது லோகோ போன்ற Google பிராண்டைப் பயன்படுத்துவது;
  • Google பிராண்டுகள், Google Maps, Street View, பிற Google வர்த்தக முத்திரைகள் போன்றவற்றை டொமைன் பெயரில் பயன்படுத்துவது;
  • Google பிராண்டுகள், Google Maps, Street View, பிற Google வர்த்தக முத்திரைகள் போன்றவற்றை உடைகளில் (சீருடைகள் போன்றவற்றில்) பயன்படுத்துவது;
  • Google, Google Maps, Street View பிராண்டுகள், பிற Google வர்த்தக முத்திரை போன்றவற்றைத் தங்கள் Google Business Profileலில் பயன்படுத்துவது;
  • குறிப்பிட்ட தயாரிப்பையோ சேவையையோ Google பரிந்துரைப்பதாகத் தெரிவிக்கும் வகையில் Google வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்துவது.